இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடன் சிறப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் ஜேரட் குஷ்னர் விரைவில் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இப்பயணத்தில் தற்போது கலந்து கொள்ள திட்டமிடப்படவில்லை. எனினும், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து தேவையானால் இஸ்லாமாபாத் செல்லத் தயாராக இருப்பதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இந்த முக்கிய சந்திப்பு நடைபெறும் திகதி அல்லது நேரம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.




