பல ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் 'நீல நிலா' இன்று இரவு காணலாம்
“நீல நிலா” (Blue Moon) என அழைக்கப்படும் அரிய சந்திர நிகழ்வை இன்று (31) இரவு பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கிறது.
விண்வெளி அறிவியலாளர் Gihan Weerasekara கிஹான் வீரசேகர தெரிவித்ததாவது, இந்த நிகழ்வு சில நேரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றலாம்; விசேட சூழ்நிலைகளில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காணப்படக்கூடும்.
“நீல நிலா” என்று அழைக்கப்பட்டாலும், நிலா உண்மையில் நீல நிறத்தில் தோன்றாது. ஒரு மாதத்தில் ஏற்படும் இரண்டாவது பௌர்ணமி அல்லது ஒரு பருவகால சந்திரச் சுழற்சியில் ஏற்படும் கூடுதல் பௌர்ணமியை குறிக்க இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது.
வானம் தெளிவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இன்று இரவு இந்த அரிய சந்திர நிகழ்வைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




